நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது சராசரியாக குறைந்தபட்ச வெப்பநிலையாக 8 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிகஅளவில் வர தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக, உதகையில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, குன்னூரில் உள்ள டால்பின்நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ்பூங்கா, காட்டேரிப்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக தட்பவெப்பநிலையும் அதற்கு உகந்தாற் போல நிலவி வருகிறது.

மேலும், தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துக் காணப்படுகின்றனர். அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் சில்லென்று இதமான காற்றும் வீசுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகின்றனர்.
