கோவையில் சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனுக்கு வலைவீச்சு

கோவை : சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தலைமறைவான சகோதரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வபுரம் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தலைமறைவான சகோதரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வபுரம் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த கார் ஒட்டுநர் ஒருவருக்கு, ஒரு மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் மகளும், டிப்ளமோ படிக்கும் மகனும் உள்ளனர். இந்த நிலையில், டிப்ளமோ படிக்கும் கார் ஓட்டுநரின் மகன், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தனது சகோதரிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி உள்ளார். இதனால், மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளதாக தெரிகிறது. 

இத்தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிய வந்ததையடுத்து, மாணவியிடம் அதிகாரிகள் பேசியுள்ளனர். ஆனால், மாணவி தனது கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் பற்றி கூற மறுத்துவிட்டார். அவர்களது பெற்றோர்களும் புகார் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, மாணவி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதில், அவரது சகோதரர் தான் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, செல்வபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரது சகோதரரை தேடி வருகின்றனர். சகோதரனே தனது சொந்த சகோதரியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...