நாட்டிலேயே முதல்முறையாக ஏரியில் மிதக்கும் சோலார் தகடுகளால் 2 மெகாவாட் மின்சார உற்பத்தி : விசாகப்பட்டினம் மாநகராட்சி அசத்தல்

திருமலை : நாட்டிலேயே முதல்முறையாக ஏரி நீரில் மிதக்கும் சோலார் தகடுகளால் 2 மெகாவாட் மின்சார உற்பத்தியை விசாகப்பட்டினம் மாநகராட்சி தொடங்கி அசத்தியுள்ளது.

திருமலை : நாட்டிலேயே முதல்முறையாக ஏரி நீரில் மிதக்கும் சோலார் தகடுகளால் 2 மெகாவாட் மின்சார உற்பத்தியை விசாகப்பட்டினம் மாநகராட்சி தொடங்கி அசத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி கார்ப்பரேஷன் திட்டத்தின் கீழ் முடசர்லோவாவா ஏரியில் 20 ஏக்கர் பரப்பளவில் மிதக்கும் சோலார் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இதுவரை 10 முதல் 500 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சோலார் தகடுகள் பொருத்தப்பட்ட நிலையில், முதல் முறையாக 2,000 கிலோ வாட் (2 மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி செய்யும் விதமாக, விசாகப்பட்டினம் மாநகராட்சி இந்த சோலார் தகடுகளை 7 மாதத்தில் அமைத்துள்ளது.

ஏரியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும் சோலார் தகடுகள் மூழ்காத வகையில், ஏரியில் உள்ள தண்ணீரின் அலையினாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, விசாகப்பட்டினம் மாநகராட்சிக்கு தினந்தோறும் 50 ஆயிரம் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் பிளான்ட் மூலமாக 25 ஆண்டுகளுக்கு மின்சார உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதனால் 1,540 டன் நிலக்கரி எரித்து மின்சாரம் தயாரிப்பது தடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், நிலக்கரி எரிப்பதால் 3,080 டன் கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டின் பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகவும், ஏரியில் உள்ள தண்ணீர் ஆவியாவதை தவிர்க்கும் விதமாகவும், தண்ணீரில் உள்ள உயிரினங்களுக்கும் பாதிக்காத வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்பு மற்றும் மின்சார உற்பத்தி செய்யும் விதமாக இதுபோன்ற பல திட்டங்களை செயல்படுத்த விசாகப்பட்டினம் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...