கோவை : விபத்தில் சிக்கிய காருக்கு உரிய இழப்பீடு வழங்காத தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ. 19 லட்சத்தை அபராதமாக விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோட்டை அடுத்த அங்கூர்ரோட்டை சேர்ந்த வினோதினி கடந்த 2015-ல் நாமக்கலில் உள்ள கார் விற்பனையகத்தில் ரூ. 15 லட்சத்துக்கு வோல்ஸ்வேகன் காரை புதிதாக வாங்கியுள்ளார். இதற்காக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இயங்கி வரும் எச்.டி.எப்.சி. காப்பீடு நிறுவனத்தில் வாகன காப்பீட்டு செய்திருந்தார்.
இந்த நிலையில், கார் வாங்கிய சில மாதங்களில் விபத்துக்குள்ளானதை அடுத்து, காப்பீட்டு தொகை கேட்டு காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்தார். அந்நிறுவனம் பல காரணங்களை சுட்டிக்காட்டி காப்பீட்டு பணத்தை தராமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், அதிருப்தி அடைந்த
வினோதினி கடந்த 2015-ல் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் உரிய இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தார்.
இவ்வழக்கை விசாரித்து வந்த கோவை நுகர்வோர் ஆணைய தலைவர் பாலசந்திரன், உறுப்பினர் அமுதம் ஆகியோர் மனுதாரருக்கு காப்பீட்டு தொகையாக, 19 லட்சத்து 35 ஆயிரத்து 610 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 25 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன், வழக்கு செலவுக்கு ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ.19 லட்சத்து 62 ஆயிரத்து 610 வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தனர்.