8 மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் கட்டாயம் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது : மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா அறிவுறுத்தல்

கோவை : ஜனவரி முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில், எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாரும் பிளாஸ்டிக்கை கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது என மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவை : ஜனவரி முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில், எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாரும் பிளாஸ்டிக்கை கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது என மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- தமிழக அரசு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு காவல்துறை மேற்கு மண்டலத்தின் கீழ் உள்ள கோவை, திருப்பூர், சேலம், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களிலும் காவல்துறையினரும், அவர்களது குடும்பத்தினரும் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட போலீஸாருக்கும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், காவல்நிலைய உணவகங்களிலும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது. எனவே, ஜனவரி முதல் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது தெரியவந்தால் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு பொதுமக்கள் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம். 

நகை பறிப்பு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் ஊரகப் பகுதிகளில் தனியாக இருக்கும் முதியவர்களைக் குறி வைத்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இதைக் கருத்தில் கொண்டு எட்டு மாவட்டங்களிலும் ஊரகப் பகுதிகளில் உள்ள முதியவர்கள் குறித்த விபரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட நாள்களில் விடுப்பு அளிப்பதற்காக அதுதொடர்பான விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இதன்மூலம். சம்பந்தப்பட்ட நாள்களில் அவர்களுக்கு முன்கூட்டியே விடுப்பு வழங்கப்படும், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...