யூ-டியூப்பை பார்த்து ஆன்லைனில் தொழில் செய்ய முயன்றவரிடம் ரூ. 60,000 மோசடி : பாதிக்கப்பட்டவர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : திருப்பூரில் யூ-டியூப்பை பார்த்து எல்.இ.டி.‘பல்பு’ வாங்குவதற்கு ஆன்லைன் மூலம் ரூ. 60,000-ஐ இழந்த எலக்ட்ரிசன், தனது பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.

திருப்பூர் : திருப்பூரில் யூ-டியூப்பை பார்த்து எல்.இ.டி.‘பல்பு’ வாங்குவதற்கு ஆன்லைன் மூலம் ரூ. 60,000-ஐ இழந்த எலக்ட்ரிசன், தனது பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார்.

இதுகுறித்து திருப்பூர், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியிடம் பாதிக்கப்பட்ட காஜா மைதீன் (42) என்பவர் இன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர், விஜயாபுரம் பகுதியில் எலக்ட்ரிசன் கடை நடத்தி வருபவர் காஜா மொய்தீன். கடையில் அதிக வருமானம் இல்லாத காரணத்தினால் வேறு எதாவது தொழில் செய்யலாம் என்ற யோசனையில் இருந்துள்ளார். இதுதொடர்பாக, யூ டியூப்பை பார்க்கும் பொழுது எல்.இ.டி. பல்பு தயாரித்து விற்பனை செய்வது குறித்த விளம்பரத்தைக் கண்டுள்ளார். அதில், தனது மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இந்தியா.காம் என்ற இணைய வாயிலாக டெல்லியை சேர்ந்த அபி எண்டர்பிரைஸ் என்ற நிறுவனம் காஜா மைதீனை மொபைல் வாயிலாக தொடர்பு கொண்டுள்ளது.



பின்னர், எல்.இ.டி. பல்புகளை தயாரிக்கும் இயந்திரம், உபகரணங்கள் தருவதாகவும், அதை தாங்களே விற்பனைக்கு எடுத்து கொள்வதாகவும் கூறியுள்ளனர். அதற்காக, ரூ.60,000 முன் தொகை கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனை, நம்பி காஜா மைதீன் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று, அந்தப் பணத்தை அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் வெறும் 200 பல்புகள் தயாரிப்பதற்கு அளவான மெட்டீரியல், மெசின்கள் மட்டும் அனுப்பியுள்ளனர். பின்னர், மேலும், கூடுதலாக எல்.இ.டி. பல்புகளை தயாரிக்க மெட்டீரியல் பெறுவதற்காக தொடர்பு கொண்ட போது முறையான தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

மேலும், நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொண்ட மனவேதனை அடைந்த காஜா மைதீன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...