நீலகிரி : இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து உதகையில் முதன்முறையாக கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து காவல்துறையினர் இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இருசக்கர வாகனம் இயக்குபவர்கள் அதிவேகமாக செல்பவதாலும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குவதாலும் விபத்துகள் ஏற்பட்டு தலையில் படுகாயமடைந்து பல பேர் உயிரிழப்பதும், படுகாயமடைவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால், சென்னை உயர்நீதிமன்றம் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இருசக்கரம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா உத்தரவின் பேரில், காவல்துறையினர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உதகை நகர துணை கண்காணிப்பாளர் தலைமையில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியை வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் கண்டு சென்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.