நீலகிரி : உதகையில் நடைப்பெற்ற தோடர் இன மக்களின் கோயில் திருவிழாவின் போது, தகாத வார்த்தைகளால் திட்டிய நகர மத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் தோடர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ பவானிஸ்வரர் திருக்கோயிலின் 107-ம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஷோற்சவ பெருவிழா நேற்று நடைபெற்றது. உதகையின் முக்கிய வீதிகள் வழியாக பவானிஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது.

அப்போது, தோடர் மக்கள் தேரோட்டத்தின்போது காவல்துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும், காவல் துறையினர் தகாத வார்த்தைகளால் தோடர் இன மக்களை பேசியதாகக் கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில், தோடர் இன மக்களை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசிய உதகை மத்திய நகர காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தோடர் இன மக்களிடம் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென கூறி இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தோடர் இன மக்கள் கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.