திருப்பூரில் பட்டப்பகலில் ஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை : கொலைக்கான காரணம் குறித்து துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து சென்றதால் பரபரப்பு

திருப்பூர் : திருப்பூர் அருகே ஜோதிடர் ஒருவர் மர்ம நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் : திருப்பூர் அருகே ஜோதிடர் ஒருவர் மர்ம நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மங்களம் பாரதி புதூரைச் சேர்ந்த ரமேஷ் என்கிற குமார். இவர், குமரன் சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கு வெளியே கடந்த 14 வருடமாக கிளி ஜோதிடராக இருந்து வருகிறார்.



இந்த நிலையில், இன்று மதியம் தனது பணியை முடித்துவிட்டு சாப்பிட சென்ற ரமேஷை பின் தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர், ரமேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு சென்றுள்ளார். இதில், ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், கொலை செய்த நபர் தன் கையில் கொண்டுவந்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் விநியோகித்துள்ளார். அதில், ரமேஷ் பூங்காவிற்கு வரும் காதலர்களையும், பெண்களையும் தீய சக்திகள் மூலம் தன் வசமாக்கி, அவர்களை தவறாக பயன்படுத்துவதாக எழுதியிருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு தனது பெண் தோழியோடு பூங்காவிற்கு வந்த நிலையில், இவரிடம் ஜோசியம் பார்த்துவிட்டு சென்ற பின்பு, பெண் தோழி தன்னிடம் இருந்து விலகி சென்றுவிட்டதாகவும், இதுவரை அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை எனவும், இதுபோல் பல குடும்பத்தினை இவர் சீரழித்து இருப்பதாகவும் கூறி துண்டுபிரசுரங்களை வழங்கியுள்ளார்.



இதைத்தொடர்ந்து, அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிகவும் பரபரப்பான பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...