குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வலுக்கும் எதிர்ப்பு : கதிரவன் நகர் மக்கள் மனு

கோவை : குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியநாராயண பகுதி மக்களைத் தொடர்ந்து, கதிரவன் நகர் மக்களும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியநாராயண பகுதி மக்களைத் தொடர்ந்து, கதிரவன் நகர் மக்களும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 95-வது வார்டு கதிரவன் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். 

அதில், தங்கள் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது :- கதிரவன் நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தங்களது பகுதியில் கழிவுநீர் சோக்பிட் அமைத்து வெளியேற்றி வருகின்றனர். மற்ற பகுதிகளில் வெளியேறும் கழிவுகளை வாய்க்காலில் விடப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 7.5 செண்ட் இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில், அதனை அகற்றிவிட்டு கழிவுநீர் நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு இடத்தில் இதனை அமைக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர். 

கடந்த வாரம் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சத்தியநாராயண பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இதே காரணத்தை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...