கோவை : தடாகம் வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானை சின்னத்தம்பியை பிடிக்கும் வனத்துறையினரின் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதிக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்துவதாக விநாயகன், சின்னத்தம்பி என அழைக்கப்படும் இரண்டு காட்டு யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். விநாயகன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, முதுமலை வனப்பகுதியில் வனத்துறையினர் கொண்டு சென்று விட்டுள்ளனர். மேலும், சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், காட்டு யானை சின்னத்தம்பியை பிடிக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, வனம் யானைகளின் வாழ்விடம் என்ற போஸ்டர்களுடன் வந்து சமூக நீதிக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது, யானை - மனித மோதலுக்குக் காரணமான சட்ட விரோத கனிமவளக் கடத்தல்களை தடுக்கக் கோரியும், கனிமவளக் கடத்தல்களால் யானைகளின் வாழ்விடமும், வலசை பாதையும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.