கோவை : குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணபதி அருகே உள்ள கஸ்தூரிபாய் நகர் மக்கள் மனு அளித்தனர்.

கணபதி அருகே உள்ள கஸ்தூரிபாய் நகர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் வசித்து வரும் சாந்திகோவிந்தராஜ் என்பவரது வீட்டில் ஜியோ செல்போன் டவர் அமைக்க அனுமதி அளித்துள்ளதால், அந்நிறுவனம் டவர் அமைத்துள்ளது. ஆனால், அப்பகுதி மக்கள் செல்போன் டவர் அமைத்தால், அதில் இருந்து வரும் கதிர்வீச்சு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அதனை அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்த செல்போன் டவர் வைக்க அனுமதி அளிக்கக் கூடாது எனவும், மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அங்கு செல்போன் டவர் அமைவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.