கேபிள் டிவி கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கேபிள் ஆபரேட்டர்கள் மனு

கோவை : அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கேபிள் டிவிக்கான புதிய கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் திரண்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கேபிள் டிவிக்கான புதிய கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் திரண்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களே சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் புதிய முறையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடிப்படை கட்டணம் ரூ. 155 எனவும், கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்தது. இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் ரூ. 500 வரை வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக கேபிள் ஆபரேட்டர்கள் கூறுகின்றனர். 

இந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உடனடியாக புதிய கட்டண முறையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் எனவும், கேபிள் டிவிக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...