கோவை : மதுபானம் மற்றும் கள்ள சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது.
கோவை : மதுபானம் மற்றும் கள்ள சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் நான்கு வாரங்கள் இந்தக் கலை குழுவினர் தங்கி, தங்களது கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளனர். ஒரு அணிக்கு 5 நபர்கள் வீதம் 14 அணிகள் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கட்டைகோல் ஆட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை இந்த கலை குழுவினர் பொதுமக்கள் முன்னிலையில் நடத்த உள்ளனர். இதன் தொடக்க விழா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதனை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

இது குறித்து கலால் துறை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவ்வப்போது கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கையைச் சேர்ந்த கங்கை கருங்குயில் கலைக்குழுவைச் சேர்ந்த 14 அணிகள், தலா 5 பேர் வீதம் கோவை, பொள்ளாச்சி, வால்பாறை,
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்," இவ்வாறு தெரிவித்தனர்.
முன்னதாக, கலைகுழுவினரின் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கட்டைக்கால் ஆகிய நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.