சிறுதுளி அமைப்பின் சார்பில் சுண்டக்காமுத்துார் அய்யன் குட்டையை தூர்வாரும் பணி துவக்கம்

கோவை : சிறுதுளி அமைப்பின் சார்பில் சுண்டாக்காமுத்தூர் அய்யன் குட்டையை தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கியது.

கோவை : சிறுதுளி அமைப்பின் சார்பில் சுண்டாக்காமுத்தூர் அய்யன் குட்டையை தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கியது. 

அய்யன் குட்டை என அழைக்கப்படும் சுண்டக்காமுத்துார் குட்டையை சிறுதுளி தூர்வாரி சீரமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிக்கு ஜி.இ. ஆயில் அன்ட் கேஸ் கம்பெனி உதவி செய்கிறது. இந்த நிகழ்ச்சியை மாநில ஊரக நிர்வாக மற்றும் கிராம மேம்பாட்டு துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி துணை ஆணையர், நகர பொறியாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் மற்றும் சிறுதுளியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குளத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டு, பள்ளம் மேடுகள் சமப்படுத்தப்படும். தூய்மை செய்யப்பட்டு நீர் வழி போக்குவரத்து சீரமைக்கப்படும். மழை காலங்களில் இதில் தண்ணீர் சேகரிக்க வசதிகள் செய்யப்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புகள் உள்ளன.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘‘பொதுநல அமைப்புகள் மேற்கொள்ளும் இத்தகைய பணிகளுக்கு நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,’’ என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...