கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது : ரூ. 13.80 லட்சம் பறிமுதல்

கோவை : கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 13.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கோவை : கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 13.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கோவில்பாளையம் அருகேயுள்ள விளாங்குறிச்சி பகுதியில் அடிக்கடி சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவில்பாளையம் போலீஸார் அப்பகுதியில் இருந்த ஜெயபால் என்பவரது வீட்டில் திடீரென சோதனையிட சென்றனர்.

இதையடுத்து, வீட்டைச் சுற்றி வளைத்து வீட்டுக்குள் சோதனையிட்டனர். அதில், வீட்டின் அனைத்து அறைகளும் 4 முதல் 5 பேர் அமர்ந்து சூதாடும் அளவுக்கு சிறு, சிறு அறைகளாக மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர் ஜெயபால் மற்றும் அவரது நண்பர் முத்து உள்பட 31 பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 80 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச்சென்ற சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...