தோடர் இன மக்களின் பாவணிஸ்வர் திருக்கோயில் பெருவிழாவில் பாதுகாப்பு குறைபாடு : போலீசாரை தாக்க முயன்ற பொது மக்களால் பதற்றம்

நீலகிரி : தோடர் இன மக்களின் தெய்வமான ஸ்ரீ பாவணிஸ்வர் திருக்கோயில் பெரு விழாவின் போது, போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் காவல்துறையினரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி : தோடர் இன மக்களின் தெய்வமான ஸ்ரீ பாவணிஸ்வர் திருக்கோயில் பெரு விழாவின் போது, போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் காவல்துறையினரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களான தோடர் இன மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அந்த காலத்தில் நஞ்சங்கோடு பகுதிக்கு சென்று சிவ பெருமானை வழிப்பட்டு வந்தனர். அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள மகராஜா இங்கு ஒரு சிவன் கோயிலை நிறுவினார். ஆதி காலத்தில் இருந்து தோடர் இன மக்கள் ஸ்ரீ பவாணிஸ்வரரை வழிப்பட்டு வந்தனர்.

பின்னர் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் போது தோடர் இன மக்கள் முதல் நாள் இரவே சுவாமிக்கு பூஜை செய்து அவர்களுடைய கலாச்சாரம் நடனம் ஆடுவார்கள். பின்னர் அடுத்த நாள் காலையில் சூரியன் தோன்றுவதற்க்கு முன்னே தோடர் இன மக்கள் பவாணிஸ்வரருக்கு மந்திரங்கள் சொல்லி அன்று காலை தேரை வடம் பிடித்து வருவர். இவர்கள் தேர் முன் அவர்களுடைய கலாச்சாரம் நடனம் ஆடி இயற்கை தெய்வங்களை வழிபடுவர்.



இந்த நிலையில், ஸ்ரீ பவாணிஸ்வரர் திருக்கோயிலின் 107ம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஹேற்சவ பெருவிழா இன்று நடைபெற்றது. உதகையின் முக்கிய வீதிகள் வழியாக பவாணிஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது. இதில், தோடர் இன மக்கள் பாரம்பரிய கலாச்சார நடனம் ஆடி தேரை வடம் பிடித்து வந்தனர்.



தோடர் மக்கள் நடனமாடி கொண்டிருக்கும் போது காவல்துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும், காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறியதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர், காவல்துறையினரை தாக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனையடுத்து உதகை நகர துணை காவல் கண்காணிப்பாளர் திருமேனி பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...