திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், திருப்பூர், கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விவசாய நிலங்களில் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லாமல், நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் வழியாகக் கொண்டு செல்லக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விவசாய நிலங்களின் மீது கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளிபாளையத்தில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 7-வது நாளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் வாயில் கருப்புத் துணி கட்டி பங்கேற்றுள்ளனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 10 பேர் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தையும் துவக்கினர். இதனை சட்டமன்ற உறுப்பினர் தனியரசு மற்றும் விவசாயி அய்யாக்கண்ணு ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும், விவசாயிகளின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கல்லூரி மாணவர்களும் ஆதரவளித்து ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வருகிற 26ம் தேதி பொங்கலூர் ஒன்றியத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.