ஜி.எஸ்.டி. கவுன்சிலின் வரி குறைப்பு நடவடிக்கை : சிறு,குறு நிறுவனங்களின் ஆதரவும், அதிருப்தியும்

கோவை : சினிமா கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு நடவடிக்கைக்கு சிறு,குறு நிறுவனங்களின் ஆதரவும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன.

கோவை : சினிமா கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு நடவடிக்கைக்கு சிறு,குறு நிறுவனங்களின் ஆதரவும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன.

31-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் ஜெட்லி தலைமையில் நேற்று  நடந்தது. இந்தக் கூட்டத்தில், 22 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து குறைக்கப்பட்டு உள்ளது.. யாத்திரிகர்களுக்கான சிறப்பு விமானத்தில் பொருளாதார வகுப்பு டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாகவும், பிசினஸ் வகுப்பு கட்டணம் மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது. பவர் பேங்குகள், வீடியோ கேம்ஸ், சிறு விளையாட்டு உபயோகப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மாற்றுத்திறனாளிகள் சாதனங்கள் 28 சதவீத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ரூ. 100-க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட் கட்டணங்கள் மீதான ஜி.எஸ்.டி. 18 லிருந்து 12 சதவீதமாகவும், ரூ.100க்கு மேல் உள்ள கட்டணத்திற்கான ஜி.எஸ்.டி. 28-லிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி கட்டணம் (சேமிப்பு கணக்கு மற்றும் ஜன்தன் யோஜனா) மானிட்டர்கள், டிவிக்கள், டயர் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பு வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி குறைப்பு நடவடிக்கைக்கு சிறு,குறு நிறுவனங்களின் ஆதரவு  தெரிவித்துள்ளன. மேலும், 2019 மார்ச் மாதம் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரி செலுத்தத் தவறினால், விதிக்கப்படும் அபராதத் தொகை தளர்த்தப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதனிடையே, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீதமாக இருக்கும் ஜாப் வொர்க்கிற்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாகக் கிரக வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசலிக்காததற்கு தொழில் கூட்டமைப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக குடிசை மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது :- ஜி.எஸ்.டி. வரி செலுத்தத் தவறினால், விதிக்கப்படும் அபராதத் தொகை தளர்த்தப்பட்டதனால், மிகப்பெரிய பிரச்சனை சிறு, குறு நிறுவனங்களுக்கு தவிர்க்கப்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர்கள் எடுத்து செய்யும்  சிறு, குறு நிறுவனங்களுக்கு அதற்கான தொகை வர 2 அல்லது 3 மாதங்களாகும். இதனால், உரிய நேரத்தில் ஜி.எஸ்.டி. வரியை செலுத்துவது அரிய காரியமாகும்.தற்போதைய கவுன்சிலின் முடிவு வரவேற்கத்தக்கது, இவ்வாறு கூறினார்.

இதே கருத்தை கோவை கோசிமாவின் தலைவர் எஸ். சுருளிவேலும் கூறியுள்ளார். மேலும், சிறு, குறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஜி.எஸ்.டி. கவுன்சில் புரிந்துகொள்ளவில்லை, என்றார்.

“சிறு, குறு நிறுவனங்களை பெரும்பாலும் உரிமையாளர்களே நடத்துவதால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஒவ்வொரு மாதமும் செலுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே, ஒவ்வொரு கால்இறுதிக்கு ஒரு முறை வரி செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும்”, இவ்வாறு தமிழக குடிசை மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ஜே.ஜேம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...