கோவை : ஆனைகட்டி அருகே உடலில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட பெண் சிறுத்தையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு எரிக்கப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் சரகம் ஜம்புகண்டி சரக வனப்பகுதியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலும், மாங்கரை - ஆனைகட்டி நெடுஞ்சாலையின் ஓரத்தில் 50 மீட்டர் தொலைவிலும் மத்திமரப்பள்ளம் உள்ளது. இங்கு உடலில் காயங்களுடன் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சிறுத்தை நேற்று உயிரிழந்து கிடப்பதாக கால்நடை மேய்ப்பவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டனர். பின்னர், விலங்கின் உடற்கூறாய்வுக்கு சிறுத்தையின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், இன்று நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வனத்துறையினரால் எரிக்கப்பட்டது.