உதகை தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்பிற்கான கட்டணம் உயர்வு : 2,000-க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிப்பு

நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் திரைப்பட படபிடிப்பு கட்டணம் ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி திரைப்பட சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் திரைப்பட படபிடிப்பு கட்டணம் ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி திரைப்பட சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களின் படபிடிப்புகள் நடைபெற்றது. குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சண்டை காட்சிகள், பழமை வாய்ந்த கட்டடங்களில் பேய் படங்கள் மற்றும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பாடல் காட்சிகள் படப்பிடிக்காமல் இருந்ததில்லை.

மேலும், சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அவர்கள் தவறாமல் கண்டுகளித்து செல்லும் முக்கிய சுற்றுலாதலம் உதகை தாவரவியல் பூங்காவாகும். 55 ஏக்கர் பரப்பில் புல்வெளி மற்றும் பூந்தோட்டங்கள் அமைந்த பூங்கா என்றுமே சுற்றுலா பயணிகளின் நினைவில் மறையாதது.



ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த பூங்காவில் கூட்டம் அதிகரித்து, தினமும் திருவிழா போல காட்சியளிக்கும். மே மாதம் மூன்று நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சியின் போது மட்டுமே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும்.

தோட்டக்கலைத்துறையினர் முக்கிய வருவாய் தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணமாகும். ஆண்டுக்கு ரூ. 7 கோடி வரை இந்த பூங்கா மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. 

இப்பூங்காவில் திரைப்பட பிடிப்பு கட்டணம் ரூ. 25 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இங்கு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் சினிமா மற்றும் சீரியல் படபிடிப்பு நடத்துவது குறைந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக நீலகிரி திரைப்பட சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதன் காரணமாக இந்த தொழிலை நம்பியுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் படபிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என நீலகிரி திரைப்பட சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...