கோவை : ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
கோவை : ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 22-வது மாநில மாநாடு இன்று தொடங்கியது. இதில், பங்கேற்ற பிறகு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் சங்க அலுவலகத்தை பூட்டியதும் விஷால் கைது செய்யபட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது. மேலும், விஷால் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை. உயர்நீதிமன்றம் மூலம் விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இருந்துள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை எப்படி வந்தது..?. தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் எதிர் அணியில் இருப்பவர்களில் ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். மற்றொருவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். இதனால், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது போல் இந்த இரு நாட்கள் சம்பவம் இருந்தது,என்றார்.

பிரதமர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், இது நேரம் வரும்போது தான் முடிவு செய்ய வேண்டிய விஷயம். யாரும் ராகுல்காந்தி பிரதமராக வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ராகுல்காந்தியை முன்மொழிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை ராகுல்காந்தி பிரதமர் என காங்கிரஸ் கட்சியில் இருந்து சொல்லப்படவில்லை. அனைவரது தகவல்களை கணினியில் எடுக்கலாம் என மத்திய அரசின் உத்தரவு உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உள்ளது. இந்தத் திட்டம் பொதுமக்களுக்கு மட்டுமா..?, அல்லது அனைவருக்கும் பொருந்துமா..?. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி.யை குறைக்க கூறியபோது குறைக்காமல், தற்போது 5 மாநில தேர்தல் தோல்விக்கு பின்னர் குறைத்து
உள்ளனர். ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியபோது ஏன் இதனை செய்ய முடியாது என்று சொன்னார்கள்..?.
பிரியங்கா சோப்ரா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடிந்த பிரதமரால், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை ஏன் சந்திக்க நேரம் இல்லாமல் போனது. புயலால் பாதிக்கபட்ட விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லாத முதல் பிரதமர் இவர் தான். அ.தி.மு.க., பா.ஜ.க. உறவு கை மற்றும் கைக்கு போடும் கிளவ்ஸ் போன்றது. இருவருமே விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க.,அ.தி.மு.க.வை வேறு வேறாக பார்க்கவில்லை. பா.ஜ.க. சொல்வதைத் தான் அ.தி.மு.க. செய்கிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.