கோவை: பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் என்று பெரியாரியவாதிகளால் கொண்டாடப்படும் ஈ.வே.ராமசாமி-யின் நினைவு தினம் வரும் 24-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி திருச்சியில் ஒரு மாபெரும் கருஞ்சட்டை பேரணி நடத்த பெரியாரிய இயக்கங்கள் முடிவு செய்துள்ளன.
நாளை (ஞாயிறு) திருச்சியில் நடைபெறும் இந்த பேரணிக்கு ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பு என்னவென்றால், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இந்த பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை.
முழுக்க முழுக்க பெரியார் தத்துவங்களை நிலை நிறுத்தி, அதனை பின்தொடரும் சுமார் 130 பெரியார் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மட்டுமே அழைப்பு.
திருச்சியில் உள்ள கோகினூர் திரையரங்கம் முன்பாக தொடங்கும் இந்த பேரணி, உழவர் சந்தை வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று அங்கு நிறைவடைகிறது.
பேரணிக்கு, தமிழ் தேசிய தந்தை என்று போற்றப்படும் 'பாவலேறு' பெருஞ்சித்திரனாரின் மகனும், தமிழக மக்கள் முன்னணி என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பொழிலன் தலைமை தாங்குகிறார்.

பேரணி குறித்து அவர் கூறுகையில்:-
நாட்டை முற்றிலுமாக காவி மயமாக்க துடிப்பவர்களை கண்டிக்கும் விதமாக நடத்தப்படும் பேரணி இது. பார்ப்பனியத்தின் கொடுஞ்செயல்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சி.
எந்த நாட்டிலும் தனது தாய் மொழியை புறந்தள்ளி மற்ற மொழிக்கு மரியாதை கொடுக்கப்பட மாட்டாது.
ஆனால் இங்கு தான், சமஸ்கிருத மொழி மட்டுமே கோவில்களில் மந்திரம் ஓதும் மொழியாக இருக்க வேண்டும் என்றும், தமிழ் ஒரு தீண்டத்தகாத மொழி என்றும் போதிக்கின்றார்கள். இதனையே, பார்ப்பனியத்தின் சதி என்கிறோம்.
சமூக மாற்றத்திற்கான பேரணி என்பதால், அதற்காக உழைக்கும் அமைப்புகளை மட்டும் பேரணிக்கு அழைத்துள்ளோம்." என்றார்.
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், "பெரியாரின் சிந்தனைகள் இந்த மண்ணில் நிலைத்து நிற்பதால் தான் மதவாத அமைப்புகளால் தமிழகத்தில் வேரூன்ற முடியவில்லை.

பா.ஜ.க போன்ற மதவாத கட்சிகளுக்கு இடமில்லை, இது பெரியார் மண் என்பதை உணர்த்தவே இந்த பேரணி நடத்தப்படுகிறது.
பேரணியில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மே-17 இயக்கம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட 150 அமைப்புகள் இதில் கலந்து கொள்கின்றன.
பெரியாரால் பயனடைந்த தமிழக மக்கள், பெண்ணியவாதிகள், பெரியார் வாங்கிக்கொடுத்த உரிமைகளை பாதுகாக்க நினைப்பவர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்." என்றார்.