ஆனைகட்டி அருகே காயங்களுடன் பெண் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு : வனத்துறையினர் விசாரணை

கோவை : ஆனைகட்டி அருகே உள்ள வனப்பகுதியில் உடலில் காயங்களுடன் பெண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : ஆனைகட்டி அருகே உள்ள வனப்பகுதியில் உடலில் காயங்களுடன் பெண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

பெரியநாயக்கன்பாளையம் சரகம் ஜம்புகண்டி சரக வனப்பகுதியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலும், மாங்கரை - ஆனைகட்டி நெடுஞ்சாலையின் ஓரத்தில் 50 மீட்டர் தொலைவிலும் மத்திமரப்பள்ளம் உள்ளது. இங்கு உடலில் காயங்களுடன் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சிறுத்தை உயிரிழந்து கிடப்பதாக கால்நடை மேய்ப்பவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 



அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டனர். பின்னர், விலங்கின் உடற்கூறாய்வுக்கு சிறுத்தையின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...