நீலகரி : தடாகம் பகுதியில் இருந்து பிடித்துச் சென்று முதுமலையில் விடப்பட்ட காட்டு யானை விநாயகன், அங்கு யானைக் கூட்டங்களுடன் சகஜமாக சுற்றித் திரிவது வனத்துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உலா வந்து கொண்டிருந்த காட்டு யானைகளில் ஒன்றான விநாயகனை வனத்துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு சிறைபிடித்து முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். பயிர்களை சேதப்படுத்தி வந்தாலும், மனிதர்களிடம் நட்புடனேயே பழகி வந்த விநாயகனின் பிரிவு தடாகம் மக்களை நீங்கா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, புதிய வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்ட விநாயகனின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, அதன் கழுத்தில் ரேடியோ காலர் எனப்படும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. 4 நாட்களாக முதுமலைப் பகுதியில் நடமாடி வரும் விநாயகனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், சேண்ட் ரோடு அருகே விநாயகன் அங்குள்ள யானைக் கூட்டங்களுடன் சகஜமாக வலம் வருவது தெரிய வந்துள்ளது.

ஒரு யானை தனித்து விடப்படுவதும், கூட்டங்களுடன் சேர்ந்து கொள்வதும் அதன் மதநீரைப் பொறுத்துதான் இருக்கும். அந்த வகையில், தடாகத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட விநாயகன், அங்குள்ள யானைக் கூட்டங்களுடன் சேர்ந்திருப்பது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, விநாயகனின் சாணத்தை பரிசோதனை செய்ததில், அதன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதும் வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.