உதகையில் மனித கழிவுகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் ஒருநாள் கருத்தரங்கு

நீலகிரி : விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் மனித கழிவுகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் ஒருநாள் கருத்தரங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உதகையில் நடைபெற்றது.

நீலகிரி : விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் மனித கழிவுகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் ஒருநாள் கருத்தரங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உதகையில் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தனிநபர் கழிப்பிடம் கட்டுவதன் அவசியம் குறித்தும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களிடையே தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் தனிநபர் கழிப்பிடம் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதையடுத்து, அதன் கழிவுகள் திறந்தவெளி மற்றும் ஓடைகள், ஆறுகளில் கலப்பதால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.



இதனைக் கருத்தில் கொண்டு உதகையில் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனம் மனித கழிவுகளை சேகரித்து, அதில் இருந்து விவசாய நிலத்திற்கு இயற்கை முறையில் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், விவசாயப் பயிர்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

மேலும், குடியிருப்புகளில் இருந்து வீணாக வெளியேறும் கழிவுநீரை சேகரித்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்திற்குப் பயன்பட்டு வருகிறது. ஒரு குடியிருப்புக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர் நீர் வீணாகி கொண்டிருந்த நிலையில், தற்போது கேத்தி பேருராட்சியில் சுமார் 400 வீடுகளில் இருந்து 400 மில்லியன் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சுத்திகரித்து விவசாயத்திற்கு உபயோகிக்கப்பட்டு வருகிறது. 



இந்தக் கருத்தரங்கை சிறப்பு மேம்பாட்டு திட்ட இயக்குநர் பாபு தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான விவசாயிகள், பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...