நாடாளுமன்ற தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார் : கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை : மக்களவை தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை : மக்களவை தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்தில், மக்கள் நலனுக்காக மாற்றத்தை விரும்பும் கட்சியான மக்கள் நீதி மய்யம் ஒத்த ரீதியான அரசியல் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இப்படியான ஒரு கூட்டணியை முடிவு செய்யும் உரிமையை கட்சித் தலைவரான கமல்ஹாசனுக்கு வழங்குகிறோம். இவ்வாறு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் நாங்கள் திண்ணமாக உள்ளோம். 40 தொகுதிகளுக்கு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. அதன் பொறுப்பு துணைத் தலைவர் மகேந்திரனிடம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றிச் சொல்வதற்கு இப்போது அவசியமில்லை. எங்களுடைய பிரசாரம் தமிழகத்தின் நலனை நோக்கியதாகத்தான் இருக்கும். தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. 

நான் கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே சிறியவர், பெரியவர் என வயது வித்தியாசம் பார்க்காமல் அரசியலில் அனுபவமுள்ள பலரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். இப்போதும் என் கட்சியில் உள்ளவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவெடுக்கப்படும். என் நலனையும் மக்கள் நீதி மய்யத்தின் நலனையும் மனதில் கொண்ட தம்பிகள் நிறைய பேர் சினிமா துறையிலும், வெளியிலும் இருக்கிறார்கள். 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நானும் போட்டியிடவுள்ளேன், இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...