பொன்.மாணிக்கவேல் நேர்மை குறித்து கேள்வி எழுப்பிய அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஹெச்.ராஜா பதிலடி!

கோவை : பொன்.மாணிக்கவேல் நேர்மையானவரா என்று கேள்வி கேட்பவர்களின் நேர்மை மக்களிடம் கேள்விக்குட்படுத்தப்படும் என சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தின் கருத்துக்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்தார்.


கோவை : பொன்.மாணிக்கவேல் நேர்மையானவரா என்று கேள்வி கேட்பவர்களின் நேர்மை மக்களிடம் கேள்விக்குட்படுத்தப்படும் என சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தின் கருத்துக்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்தார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 140-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டவர் நேர்மையானவரா என்பது குறித்து மக்களிடம் தான் கேட்க வேண்டும். பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல்துறை அதிகாரிகள் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள். புகார் அளித்த காவல்துறை அதிகாரிகளின் பொருளாதாரத்தை சோதனை செய்ய வேண்டும்.

கோவை மாதம்பட்டியில் பூஜைகள் நடைபெறாமல் உள்ள ஒரு கோவிலை 2015-ல் இருந்து புனரமைக்க அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை கைவிடப்படுவதே சிலைகளை திருடுவதற்கு தான். 

அரியலூர் சுத்தமள்ளி ஊரில் உள்ள நடராஜர், சிவகாமி ஆகிய இரு சிலைகள் நியூயார்க்கிற்கு எப்படி சென்றது..?. அங்குள்ள சிவன் கோவிலில் உள்ள 10 சிலைகள், அருகிலுள்ள பெருமாள் கோவிலில் இருந்த 8 சிலைகள், 45 ஆண்டுகளாக பூஜை செய்யாமல் பூட்டப்பட்ட நிலையில், 2007-ல் இந்து சமய அறநிலையத்துறை கோவிலை திறந்து புகைப்படம் எடுத்த அடுத்த ஒரு வாரத்தில் கோவிலில் கொள்ளை நடந்துள்ளது. மாயமான 18 சிலைகள் திருடப்பட்டு நியூயார்க் சென்றுள்ளது. அந்த வழக்கில் தான் ஜெர்மனியில் இருந்த சுபாஷ் கபூர், தீனதயாளான், சஞ்சீவி அசோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோவிலில் 300 கோடிக்கும் மேற்பட்ட சிலைகள் காப்பகத்தில் இருந்த சிலைகளை போலியாக செய்த வழக்கில் அதிகாரி கஜேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அறநிலையத்துறையினர் போராட்டம் நடத்தினால் மொத்த துறையையும் ஊழல் நிறைந்தது என்பது தானே அர்த்தம். கவிதா, திருமகள் சிலை திருடர்கள் என்பதை ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டதால் தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் இவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டது அவமானம் என்பதால், அதை மீட்பவரை ஊக்கம் கொடுக்க வேண்டுமே தவிர, சந்தேகப்படக்கூடாது, இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக பேசிய அவர், மக்களுக்கு பாதுகாப்பான உணர்வை தரக்கூடியது இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. 40 ஆண்டுகளாகப் போராடி வந்த ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்த்து வைத்துள்ளது. உலக யோகா தினம் கொண்டாடப்படுவதற்கு அமெரிக்க எச்சரிக்கையை மீறியும் ஈரான், ஐக்கிய அரேப் எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் உள்ளூர் பணத்தில் வர்த்தகம் செய்யப்படுவதால், இந்தியாவிற்கு தற்போது உலக அளவில் மரியாதை ஏற்பட்டுள்ளது. உலக அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெரும் நாடாக இந்தியா உள்ளதற்கு ஜி.டி.பி. 7.3% ஆனதே சான்றாகும். அந்நிய நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் நம் இராணுவம் உயர்ந்துள்ளது, என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...