கோவையில் வானவராயர் மாதாந்திர இலக்கிய சந்திப்பு : நாகரீகத்தின் மொழி தமிழ் என ஆராய்ச்சியாளர் பாலகிருஷ்ணன் பேச்சு

கோவை : வானவராயர் அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் மாதாந்திர இலக்கிய சந்திப்பில் நேற்று ஆராய்ச்சியாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

கோவை : வானவராயர் அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் மாதாந்திர இலக்கிய சந்திப்பில் நேற்று ஆராய்ச்சியாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். 



வானவராயர் அறக்கட்டளையில் ஒவ்வொரு மாதமும் இலக்கிய சந்திப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதனுடைய இம்மாத சந்திப்பில் சென்னையில் அமைந்துள்ள சிந்து ஆராய்ச்சி மையத்தின் கௌரவ ஆலோசகர் முனைவர். பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 

இந்நிகழ்ச்சியில், சிந்து சமவெளி நாகரீகம் குறித்த சிறப்பு உரையாற்றத் தொடங்கிய பாலகிருஷ்ணன், 2010 -ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு சிந்து சமவெளி நாகரீகம் குறித்த கட்டுரைகளைச் சமர்ப்பித்ததை நினைவு கூர்ந்தார். 

இதையடுத்து, இந்திய தொல்லியல் துறையில் மிகவும் முக்கியமான நாள் 1924- ம் ஆண்டு செப்டம்பர் 20 என குறிப்பிட்டவர் தொடர்ந்து பேசுகையில், "1902 முதல் 1928 -ம் ஆண்டு வரை ஜான் ஹூபர்ட் மார்ஷல் இந்தியாவின் தொல்லியல் துறையில் பொது இயக்குனராக பணியாற்றினார். சிந்து சமவெளி நாகரீகம் உலகளாவிய அளவில் பரவியதற்கு அவரே முக்கிய காரணம். அவரில்லாமல், இந்திய நாகரீகம் வேறுமாதிரியான வரலாற்றைப் பெற்றிருந்திருக்கும்," என்றார். 

"சங்க இலக்கியங்கள் தனித்துவம் வாய்ந்தவை. அவற்றைப் போல பெண்களை கவுரப்படுத்தும் வேறு இலக்கியங்கள் இல்லை. எல்லா இலக்கியங்களும் பெண்களின் அழகை பூ, நிலா, பறவைகள், இயற்கை போன்றவற்றுடன் ஒப்பிடும் போது சங்க இலக்கியங்கள் தான் பெண்களை நகரங்களின் அழகுடன் வர்ணித்துள்ளது. 

சுமார் 52 சங்க இலக்கியங்கள் பெண் வழிபாடு குறித்து எடுத்துரைக்கிறது. நாகரீகமயமாகி கொண்டிருந்த அந்த காலத்தில் நாகரீகம் எப்படியிருந்தது என்பதை இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பெண்களின் நிலையே எடுத்துரைக்கிறது," என்றார். 

அதனைத் தொடர்ந்த உரையில், மனிதர்களின் இடம்பெயர்வின் அடிப்படையில் உருவான வரலாறு, உணவு, பெயர்கள், கலாச்சாரம், கீழடி ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் குறித்து பல அரியத் தகவல்களை விவரித்தார். 

 

தமிழ் ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு குழுவின் மொழி மட்டுமல்ல, நாகரீகத்தின் மொழி என தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தி பேசினார். மேலும், நாகரீகத்தின் பயணம் குறித்த அவருடைய கட்டுரை தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது என அறிவித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...