கோவை ஓட்டல் ரெசிடென்சியில் 40 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்

கோவை : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஓட்டல் ரெசிடென்சியில் 40 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.


கோவை : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஓட்டல் ரெசிடென்சியில் 40 அடி உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. 

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கோவையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, ஓட்டல் ரெசிடென்சியில் 40 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, சிறப்பு விருந்தினர் ஏர் கமாண்டர் எஸ்.ஆர். மேனன் விளக்கேற்றி அறிமுகப்படுத்தி வைத்தார். 



இந்த நிகழ்ச்சியில் அழகிய பெண்கள் பிங்க் நிற ஆடையிலும், ஆண்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சூழலை ஏற்படுத்தினர். அதோடு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கேக்குள், வொயின் உள்ளிட்ட பலப் பொருட்கள் வழங்கப்பட்டது. 



"நமது முன்னோர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் அமைக்கப்படுவதே கிறிஸ்துமஸ் மரமாகும். தற்போது, ஓட்டல்கள், வணிக வளாகங்களில் இவை அமைக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இது நல்லதற்கான அடையாளமாகும்," இவ்வாறு கூறினார் ஓட்டல் ரெசிடென்சியில் ஆபரேசன் இயக்குநர் டி. சார்லஸ் ஃபெபியன்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...