தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதன் மாற்று என்னென்ன தெரியுமா?

ஜனவரி 1 -ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதன் மாற்றுப் பொருட்களின் பட்டியலைக் காணலாம்.

ஜனவரி 1 -ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதன் மாற்றுப் பொருட்களின் பட்டியலைக் காணலாம்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 -ம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. அதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம் என்ற கருப்பொருளின் அடிப்படையில், சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வாசித்தார். 

அதன்படி, 2019-ம் ஆண்டு முதல் மக்காத பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த, உற்பத்தி செய்ய தடை விதிக்கப்படும். இந்த தடையை அடுத்து பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருள்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் தயாரிக்கலாம். பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் குடம், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தமிழகத்தில் ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும். 

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் 25 -ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுக்காப்புத்துறை பிளாஸ்டிக் தடை உத்தரவை வெளியிட்டுள்ளது. 

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் : 

1) விசேஷங்களில் உணவு மேசையில் விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள்கள் 

2) உணவு பதார்த்தங்களை பொட்டலமிடும் மெல்லிய பிளாஸ்டிக் தாள்கள்

3) பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டு 

4) பிளாஸ்டிக் முலாம் பூசிய தட்டு 

5) பிளாஸ்டிக் டீ கப்

6) பிளாஸ்டிக் டம்ளர் 

7) தெர்மாகோல் டம்ளர் 

8) பிளாஸ்டிக் முலாம் பூசிய டம்ளர் 

9) பாலீத்தீன் பைகள் 

10) பாலீத்தீன் முலாம் பூசிய பைகள் 

11) நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள் 

12) தண்ணீர் பாக்கெட்கள்

13) பிளாஸ்டிக் ஸ்ட்ரா

14) பிளாஸ்டிக் கொடி 

பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றானவை : 

1) வாழை இலைகள் மற்றும் பாக்கு இலைகள் 

2) அலுமினிய தகடுகள் 

3) தாமரை இலைகள் 

4) காகித சுருள்கள் 

5) மூங்கில் மற்றும் மர சாமான்கள் 

6) உலோக டம்ளர்கள் 

7) காகித மற்றும் துணியினாலான கொடிகள் 

8) மண்பாண்டங்கள் 

9) துணியினாலான பைகள் 

10) செராமிக் பொருட்கள்

11) காகித ஸ்ட்ரா 

12) பிளாஸ்டிக் அல்லாத சமையல் உபகரணங்கள் 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...