நீலகிரி : இயற்கை சார்ந்த கல்விக்காக எழில் மிகுந்த நீலகிரி மலையின் அழகை ரசிக்கும் வகையில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சிறப்பு மலைரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு உதகைக்கு நீலகிரி மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டையும் கடந்த அதன் பழமை மாறாமல் இயக்கப்படும் இம்மலைரயில் யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மலை ரயிலில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை அழகை முழுமையாகக் கண்டு ரசிக்க, உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். எனவே, சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் வாரந்தோரும் சனிக்கிழமைகளில் மட்டும் சிறப்பு மலைரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மலைரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12 மணியளவில் குன்னூர் சென்றடையும். இளம் வயதிலேயே இயற்கையின் முக்கியவத்தையும் அதனை காக்க வேண்டிய அவசியத்தையும் கற்கும் வகையிலும், நூற்றாண்டை கடந்து இன்று வரை இயங்கி வரும் மலைரயிலின் சிறப்புகளை அறிந்து கொள்ளவும், இதில் பயணிக்க ரயில்வேத்துறை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனடிப்படையில், தனியார் பள்ளியினைச் சேர்ந்த 111 மாணவ, மாணவியர் மற்றும் 5 ஆசிரிய, ஆசிரியைகளை சிறப்பு மலை ரயிலில் அழைத்து சென்றது. இதற்கென வந்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் ரயில்வேத்துறை சார்பில் குடிநீர் மற்றும் திண்பண்டங்கள் அடங்கிய பைகள் வழங்கியதோடு, அவர்களுக்கு நீலகிரி மலைரயிலின் பழமையை விளக்கும் மலைரயில் கண்காட்சியையும் காட்டினர்.

பின்னர், முழுமையாக மாணவ, மாணவியரைக் கொண்டு இயக்கப்பட்ட இந்த சிறப்பு மலைரயில் மலைக்காட்டின் வழியே பள்ளத்தாக்குகளையும், மலை குகைகளை கடந்தும் சென்றது. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே உள்ள கல்லாறு, ரன்னிமேடு, ஹில்குரோவ் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்தி, அவர்களுடன் பயணித்த ரயில்வேத்துறை அதிகாரிகள் மாணவ, மாணவியருக்கு மலைரயிலின் சிறப்புகள் மற்றும் அதன் இயக்கம் குறித்து விளக்கிக் கூறினார். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயற்கை கல்வி சார்ந்த சுற்றுலா செல்ல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரயில்வே அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.