கோவை : மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறை ஆணையாளருக்கு கிடைத்த தகவலின் பேரில், கோவையில் நடத்திய தொடர் சோதனைகளில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்த மோசடியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறை கோவை ஆணையாளர் அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சில நிறுவனங்கள் சரக்கு அனுப்பாமல் வெறும் வரி ஏய்ப்பு செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, கணபதியில் இயங்கி வரும் நிறுவனங்களான ஆலியா என்டர்பிரைசஸ், விநாயக் ட்ரேடிங்க், ஸ்டார் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களில் சோதனை செய்யப்பட்டது. இதில், நிறுவனங்கள் சரக்குகளை அனுப்பாமல் வெறும் பில்களை மட்டும் கொடுத்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முகமது ஆரிப் என்பவர் இந்த மோசடி நிறுவனங்களை இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிறுவனங்கள் 100-க்கும் மேற்பட்ட மற்ற வினியோக நிறுவனங்களுக்கு பழைய இரும்பு விற்றதாகப் போலி பில் போட்டு சரக்கு அனுப்பாமல் கணக்கு காட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், முகமது ஆரிப் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், நீதிமன்றம் அவரை ரூ. 5 கோடி முன்பணமாகக் கட்டவும், மேலும் அதிகாரிகளின் மேல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு ஆணையிட்டது.
அதேபோல, கணபதியில் உள்ள நிசோக் அயர்ன் அண்ட் ஸ்டீல் என்ற நிறுவனம் ரூ. 5.19 கோடி அளவு ஜி.எஸ்.டி. வரியை போலி பில்கள் மூலமாக சரக்கில்லாமல் வரவு வைத்து, கமிஷன் பெற்று போலி பில்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், நிறுவனத்தின் முக்கிய நபரான மாணிக்கம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார்.
மேலும், முருகன் கார்ப்பரேஷன் ஸ்டீல்ஸ், ஐயப்பா டிரேடரஸ், ஹெச்.எஸ்.எம். இம்பெக்ஸ் மற்றும் நாராயணா ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவனங்களும் இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த நிறுவனங்களின் மீது நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இந்த நிறுவனங்கள் போலி பில்கள் பயன்படுத்துவதும், இவற்றை இயக்குபவர் கார்த்திக் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள மேலும் 7 நிறுவனங்களுக்கு போலி பில்களை சரக்கில்லாமல் அனுப்பியதும் தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ சத்யா சாய் பவுண்டரி மற்றும் ஆறு நிறுவனங்களில் சோதனை செய்ததில் போலி பில்கள் மூலமாக ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், தியாகராஜன் என்பவர் ஸ்ரீ சத்யா சாய் பவுண்டரி நிறுவன உரிமையாளர் என்பதும் மற்ற 6 நிறுவன உரிமையாளர்கள் அவரது குடும்ப உறுப்பினர்கள் எனவும் தெரியவந்தது .இந்த ஏழு நிறுவனங்களும் கமிஷன் அடிப்படையில் பெறப்பட்ட போலி கொள்முதல் பில்கள் மூலம் சுமார் ரூ. 750 கோடி அளவு ஜி.எஸ்.டி. வரியை வரவு வைத்து, அதன்மூலம் ரூ. 101 கோடி விற்ற முதலுக்கான ஜி.எஸ்.டி. வரியை காட்டியுள்ளதால் அரசாங்கத்திற்கு பணமாக வரி கட்டாமல் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளனர்.
ஜி.எஸ்.டி. வரி சட்டப்படி ரூ. 2 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு இருப்பின், அது கைது நடவடிக்கைக்கு உள்ளாகக்கூடிய கடுமையான குற்றமாகக் கருதப்படும். இதில், ஏழு நிறுவனங்களும் போலி பில்கள் மூலமாக ரூ. 5 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்து உள்ளதால் இதன் உரிமையாளர் தியாகராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.