கோவை : கணினிகளைக் கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் 10 துறைகளுக்கு அனுமதி அளித்து இருப்பது, தேர்தல் நேரங்களில் எதிர்கட்சிகளை கூர்ந்து கவனிக்கும் சூழலை ஏற்படுத்தும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க இளைரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :- மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும். மேலும், கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட இடங்களைப் பிரதமர் பார்வையிட்டு ஆறுதல் சொல்லாதது தமிழகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.
விரைவில் அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்த வேண்டும். ஆனால், தற்போது வடிவைக்கப்பட்டுள்ள திட்டத்தை செயல்படுத்தக் கூடிய சாத்திய கூறுகள் குறித்து தெரியவில்லை. எனவே, இதற்கு முன்பு வடிவமைக்கப்பட்ட திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். தேர்தல் வர இருப்பதால் அவினாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளனர். ஆனால், அதற்கான நிதி தற்போது அரசிடம் உள்ளதா என தெரியவில்லை.
கணினிகளைக் கண்காணிக்க 10 துறைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு. ஜனநாயக நாட்டில் கெடுபிடிகள் இருக்கக்கூடாது. இது தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிகளை கூர்ந்து கவனிக்கும் சூழல் ஏற்படும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. தகுதியான சட்டம், வலுவான சாட்சியங்களை சேகரித்து, நல்ல வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.
மேலும், பட்டாசு தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பசுமை பட்டாசு என்ன என்று எனக்கு புரியவில்லை. பட்டாசு தொடர்பான வழக்கை வாதாட, தமிழ அரசு வழக்கறிஞர் நீதிமன்றம் கூட செல்ல வில்லை. இதில் ஏதோ சதி நடக்கிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும். அதோடு போராடுபவர்களுக்கு தீர்வு காண வேண்டும்.
விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது நியாயமானது. முதலில் விவசாயிகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.