மதிப்பிழந்த ரூ.1 கோடி பழைய நோட்டுகள் காரில் கடத்தல் : 2 வாலிபர்கள் கைது

திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் அருகே காரில் ரூ.1 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளைக் கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் அருகே காரில் ரூ.1 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளைக் கடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 



நேற்றிரவு தாராபுரம் ஏரக்காம்பட்டி அருகே, காவல்துறையின் மூலம் தொடங்கப்பட்டுள்ள புதிய சோதனை நிலையத்தில் சார்பு ஆய்வாளர் செல்வராஜ், காவலர் சந்திரசேகர் ஆகியோர்கள் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக வரும் வாகனங்களை முழு சோதனைக்கு உட்படுத்தினர்.

அந்த சோதனையில் TN 09 R 0502 என்ற எண் கொண்ட ஹான்டாய் அசன்ட் கார் வாகனத்தில் வந்த 2 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், முன்னுக்கு பின்னான பதில்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, வாகன பரிசோதனையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் கைப்பற்றபட்டது. 



இதையடுத்து, தாராபுரம் காவல் ஆய்வாளர் முருகேசன் நடத்திய தீவிர விசாரணையில், கோவை மாவட்டம் கணபதியை சேர்ந்த கலைசெல்வன் (34), மற்றும் அவரது நண்பரான ப்ரதீஸ் (33), ஆகியோர் பணத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. பின் அவர்களிடமிருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 



மேலும், விசாரணையில் இந்த பணம் கோவை கிரஸ் கட் சாலையில், கேஸ் ஏஜன்சிஸ் நடத்தி வரும் தண்டபானிற்கு சொந்தமான பணம் என்றும் கமீசன் அடிப்படையில் மதுரையில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்க்கும் ஒருவரிடம் நேரில் சென்று மாற்றி வருமாறு கூறிதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து, நேற்று மாலை இதே காரில் மதுரைக்கு பணத்தை ஒப்படைக்க சென்றுள்ளனர். ஆனால், சம்மந்தப்பட்ட நபர் அங்கு இல்லாதலால் கோவை திரும்பியுள்ளனர். இதற்கிடையே, வரும் வழியில் தாராபுரம் சோதனை சாவடியில் சிக்கி கொண்டோம் என 2 வாலிபர்களும் கூறியுள்ளனர். இது குறித்து மேற்படி விசாரணையைக் காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...