ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல போராட்டங்கள் வெடித்த நிலையில், தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை பல தரப்பினரும் எதிர்த்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல போராட்டங்கள் வெடித்த நிலையில், தேசிய பசுமை தீர்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை பல தரப்பினரும் எதிர்த்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்தார்.
இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் ஆஜரான மூத்த வக்கீல் வைகை, பிற்பகலில் வெளியான உத்தரவு பற்றி, தீர்ப்பு வெளியாவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவு நகல் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதுபோன்ற நடவடிக்கைகளால், நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் மீதுள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகும் என வாதிட்ட அவர், வழக்கை முறையாக விசாரித்து உரிய உத்தரவு வழங்க வேண்டும் என்றார், வக்கீல் வைகை. மேலும், அவர் இந்த தீர்ப்பின் மூலம் அடுத்த 2 மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வேதாந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார். அவருடைய வாதத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்வதற்கு 90 நாள் அவகாசம் உள்ளது.
ஆகையால், தமிழக அரசு இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்து தான் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியும் என நீதிபதிகள் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய மார்ச் 14 வரை அவகாசம் உள்ள நிலையில், அதுபற்றி முன்கூட்டியே அடுத்த மாதம் 21ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சாதகமான உத்தரவைப் பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு இது எதிர்பாராத தீர்ப்பாக அமைந்ததுள்ளது.