தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விவகாரம் : வால்பாறை ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளருக்கு பிடிவாரண்ட்

கோவை : ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ரகு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விவகார விசாரணையில் ஆஜராகாததால், மகாலிங்கபுரம் காவல்நிலையத்திற்கு அவரைக் கைது செய்து நேரில் ஆஜர்படுத்தும்படி ஆணை அனுப்பப்பட்டுள்ளது.

கோவை : ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ரகு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விவகார விசாரணையில் ஆஜராகாததால், மகாலிங்கபுரம் காவல்நிலையத்திற்கு அவரைக் கைது செய்து நேரில் ஆஜர்படுத்தும்படி ஆணை அனுப்பப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறையில் இயங்கி வருகிறது ஸ்ரீராம் எஸ்டேட் நிறுவனம். இது கடந்த 2013 -ம் ஆண்டு முதல் 2016 -ம் ஆண்டு வரையிலான கால கட்டத்திற்குட்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதனுடன் இணைந்த நிதிகளைச் செலுத்தவில்லை. 

எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன சட்டம் 1952 பிரிவு 7 ஏ(1பி) -ன் கீழ் அந்த நிறுவனத்தின் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதுவரை 35 முறை வாய்தாக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. 

இதற்கிடையே, அந்த நிறுவனத்தின் பொறுப்பாளரான ரகு என்பவர் இரண்டு முறை மட்டுமே விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். மேலும், இறுதியாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகி வருகை பதிவேடு சம்பளம் இன்னபிற ஆவணங்களைச் சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார். 

ஆனால், இரண்டு மாத கால அவகாசம் அளித்தும் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இந்த விசாரணையானது தொழிலாளர்களின் நலன் கருதி மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் எந்த ஒத்துழைப்புகளும் அளிக்காததால் விசாரணை அதிகாரி, ரகுவிற்கு பிடிவாரண்ட் கொடுத்து உள்ளார். 

இதன்படி, நான்கு வார காலத்திற்குள் ரகுவை கைது செய்து நேரில் ஆஜர்படுத்துமாறு மகாலிங்கபுரம் காவல்நிலையத்திற்கு ஆணை அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...