மதுரை : தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடைபெற இருந்த தியான நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தஞ்சை பெரிய கோயில் பாரம்பரியமிக்கது. கட்டடக் கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது. கோயிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டி கோயில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
மதம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வுகள், கோயில் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டும். அப்படி அனுமதி வழங்கினாலும், அந்த நிகழ்வுகளும் மதப்படி, கோயில் சம்பிரதாயப்படி நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும், இவ்வாறு உத்தரவிட்டனர்.