கோவை : அன்னூர் உள்ளிட்ட ஊரக பகுதிகளை ஒருங்கிணைத்து ரூ.426 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பா. தனபால் அறிவித்தார்.

கோவை, மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது பொகலூர் கிராமம். அந்த கிராமத்தில் ரூ.3 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட அரசு நலத்திட்டப்பணிகளைச் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருமான பா. தனபால் தொடங்கி வைத்தார்.

இந்த நலத்திட்டப்பணிகளில், நான்கு இடங்களில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அம்மா பூங்கா, மற்றும் உடற்பயிற்சி மையங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ஆகியவற்றை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். மேலும், பணிக்கு செல்லும் மகளிருக்கான மானிய விலை அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 120 பெண்களுக்கு புதிய ஸ்கூட்டர் வாகனங்கள் வழங்கப்பட்டது. அதற்கடுத்ததாக, 48 பேருக்கு முதியோருக்கான உதவித்தொகை வழங்கப்பட்டன.

இதையடுத்து, சபாநாயகர் தனபால் பேசுகையில், "தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின் படி அத்திகடவு -அவிநாசி நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரபட்டுள்ளது. அன்னூர் பகுதியில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் சாலை விரிவாக்கப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. புதிய பைபாஸ் திட்டத்திற்கான ஆய்வும் நடைபெற்று வருகிறது.
மேலும், அன்னூர் மற்றும் அவிநாசி உள்ளிட்ட ஊரக பகுதிகளை ஒருங்கிணைத்து ரூ.426 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் குக்கிராமங்கள் வரை சீரான குடிநீர் வசதி கிடைக்கும்," என்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.