கோவை : தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் விதிகளை மீறி பேனர்கள் வைத்த 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், விதிகளையும் நீதிமன்ற உத்தரவுகளையும் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவை மாநகரில் அனுமதியின்றி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், லஜபதிராய் வீதி, நேதாஜி ரோடு, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் பலர் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர். இதில், பிளக்ஸ் போர்டுகள் வைத்த நவாஸ் (40), இலியாஸ் (36), மாதன் (56), பிரபுராஜ் (40), தம்பு (46), தாமரைச்செல்வன் (27), எபின் (35), விக்னேஷ் (27) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.