நீலகிரி : நீலகிரி தனிமாவட்டமாக பிரிந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான சாக்லெட் கண்காட்சி இன்று தொடங்கியது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் தனிமாவட்டமாக பிரிந்து 150 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில், 10-ம் ஆண்டு வருடாந்திர சாக்லெட் திருவிழா உதகையில் இயங்கி வரும் தனியார் சாக்லெட் அருங்காட்சியகத்தில் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 2-ம் தேதி வரை இந்த சாக்லெட் திருவிழா நடக்கிறது.

நீலகிரி மாவட்டத்தின் பெருமைகளை பறைசாட்டும் நோக்கில் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தோடர், பணியர், இருளர், குறும்பர் போன்ற பழங்குடியின மக்களின் கலாச்சாரம், வாழ்க்கையை முறையைப் பிரதிபலிக்கும் வகையில், அவர்களின் வழிப்பாட்டு தளங்கள், வீடுகள் ஆகியவை சாக்லெட்டினால் வடிவமைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், உதகையில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடமான கல்வீடு சாக்லெட்டினால் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீலகிரிக்குப் பெருமை சேர்க்கும் தேயிலைத்தூள் கொண்டு கிரின் டீ சாக்லெட், மசாலா டீ சாக்லெட், பிளாக் டீ சாக்லெட் போன்ற புதுவிதமான சாக்லெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் உற்பத்தியாகும் இயற்கை மூலிகைகள் கொண்டும், வாசனைப் பொருட்கள் கொண்டு தைம் சாக்லெட், ரோஸ்மேரி சாக்லெட், கீரை சாக்லெட், மிளகு மற்றும் ஜாஹிக்காய் சாக்லெட் போன்றவை புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மலை காய்கறி வகைகளான கேரட், பீட்ரூட், கீரை போன்ற வகைகளைக் கொண்டும் சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சாக்லெட் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும், சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், டார்க் சாக்லெட்டின் பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.