திருப்பூர் : 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், ஒரே அரசாணையில் பணியிடமாறுதல் வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், முற்றுகையிட முயன்ற கிராம நிர்வாக அலுவலர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.