அழிந்து வரும் பிணந்தின்னி கழுகுகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பாதையை திறந்து வைத்த நீலகிரி ஆட்சியர்

நீலகிரி : அழிந்து வரும் பட்டியலில் உள்ள பிணந்தின்னி கழுகுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் வகையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் விழிப்புணர்வு பதாகையை மாவட்ட ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்.

நீலகிரி : அழிந்து வரும் பட்டியலில் உள்ள பிணந்தின்னி கழுகுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் வகையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் விழிப்புணர்வு பதாகையை மாவட்ட ஆட்சியர் இன்று திறந்து வைத்தார்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், கழுகு போன்ற அரியவகை பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில், வனதூய்மையாளன் என அழைக்கப்படும் பிணந்தின்னி கழுகுகள் மாயார் ஆற்றுப்படுகை மற்றும் தெங்குமரஹாடா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாக இருந்தன.

 

காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இந்த வகை கழுகுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அழிவின் பட்டியலில் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து, பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, பிணந்தின்னி கழுகுகளான கருங்கழுத்துபாறு கழுகு, வெண்முதுகுபாறு கழுகு, மஞ்சள் முகப்பாறு கழுகு, செம்முகப்பாறு கழுகு போன்றவை நீலகிரி மாவட்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. 

இந்த நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பிணந்தின்னி கழுகுகளால் ஏற்படும் நன்மைகள் மற்றும் கழுகுகள் அழிவதற்கான காரணங்கள் என்ன என்பதை விளக்கி அளகம்டிட்டா அமைப்பு மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...