பழனியில் ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்டி பள்ளி மாணவர்கள் போராட்டம்

திண்டுக்கல் : பழனி அருகே ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் : பழனி அருகே ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் பேரூராட்சி உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஸ்டீபன்ராஜ் என்பவர் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவ, மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது. 

இதையடுத்து, கடந்த புதன்கிழமை ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் ஸ்டீபன்ராஜிற்கு ஆதரவாக பள்ளிமாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முடிந்து வெளியில் வந்த 100 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியர் ஸ்டீபன்ராஜ்க்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். 



இதனைத் தொடர்ந்து சாலைநடுவே நின்று கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் கூறும் போது ஆசிரியர் ஸ்டீபன் ராஜ் மிகவும் நல்லவர் என்றும், அவர்மீது அபாண்டமாகப் பலி சுமத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். மேலும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 



இதையடுத்து, மாணவர்கள் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரனூர் போலீசார் மாணவ, மாணவிகளைச் சமாதானம் செய்தனர். மேலும், காவல்துறையினரிடம் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்றும், எனவே அனைவரும் உடனடியாக‌ கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்தனர். எனவே, மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...