டெல்லி : இந்தியாவில் இருக்கும் அனைத்து கணினிகளில் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றப்படும் தகவல்களை சேகரிக்கவும் சி.பி.ஐ. உள்ளிட்ட 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :- நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களைக் கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்துப் பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, உளவுத்துறை, போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு, அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய விசாரணைக் குழு, ரா பிரிவு, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம், டெல்லி காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 10 அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபரின் கணினியில் இருக்கும் தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில், அதனை கணினியின் உரிமையாளர் அல்லது கணினிக்கு இணைய சேவை வழங்கும் சேவை வழங்குநர் வழங்க வேண்டும். மீறி, அளிக்கத் தவறினால், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.