திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அரை நிர்வாணமாக நாமமிட்டும், கஞ்சித் தொட்டி திறந்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், திருப்பூர், கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விவசாய நிலங்களில் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லாமல், நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் வழியாகக் கொண்டு செல்லக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விவசாய நிலங்களின் மீது கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளிபாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 5-வது நாளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, விவசாயிகள் அரை நிர்வாணமாக நெற்றியில் நாமமிட்டும், கஞ்சித் தொட்டி திறந்து தேங்காய் சிரட்டைகளில் கஞ்சி அருந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.