ரூ. 100 கோடி செலவில் பள்ளி மற்றும் மருத்துவமனையைத் திறக்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2 மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என்றும், அப்பகுதியில் சுமார் ரூ. 100 கோடி செலவில் பள்ளி மற்றும் தரமான மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி பி.ராம்நாத் தெரிவித்துள்ளார்.

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2 மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என்றும், அப்பகுதியில் சுமார் ரூ. 100 கோடி செலவில் பள்ளி மற்றும் தரமான மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி பி.ராம்நாத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- ஸ்டெர்லைட் ஆலையால் நேரடியாக 4 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆலைக்காக தினமும் ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டன. அதை நம்பி ஓட்டுநர்கள், கிளீனர்கள் என 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெற்றிருந்தனர். ஸ்டெர்லைட் ஆலை கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருப்பதால், அப்பகுதியில் வளர்ச்சியே தடைப்பட்டுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி துறைமுகத்துக்கு 20 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தாமிர தேவையில் 36 சதவீதத்தை ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்கிறது. இந்த ஆலை மூடப்பட்டதால், தாமிர விலை உயர்ந்தது. கோவையில் உள்ள மோட்டார் உற்பத்தி தொழிற்சாலைகள், பல்வேறு மின்சாதன உற்பத்தி தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பிரதமர் மோடி அறிவித்துள்ள அனைவருக்கும் வீடு திட்டம், தாமிரம் இன்றி சாத்தியமாகாது. மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் காற்று, சூரியஒளி மின்சாரத்துக்கும் அதிக அளவில் தாமிரம் தேவை.

தேசிய பசுமைத் தீர்ப்பாய தீர்ப்பின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை அணுகி, உரிய ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் 2 மாதங்களில் தொழிற்சாலை திறக்கப்படும். கடந்த 6 மாதங்களாக தொழிற்சாலை மூடிக்கிடப்பதால், ஆலை திறந்தாலும் அதை இயக்க சுமார் 6 மாதங்கள் பராமரிப்புப் பணிகளை செய்ய வேண்டி இருக்கும். தொழிற்சாலை பகுதியில் பசுமைப் போர்வையை அதிகரிக்க அரசிடம் சுமார் 300 ஏக்கர் நிலம் கேட்டிருக்கிறோம். தேசிய பசுமைத் தீர்ப்பாய வரைவு தீர்ப்பு முன்கூட்டியே வெளியானதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டதாக அறிந்தேன். காவல்துறை விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வரும். 

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில், தூத்துக்குடி பகுதியில் மக்கள் தொடர்பு திட்டத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். பொதுமக்களுக்கு எத்தகைய திட்டங்கள் தேவை என்பதை அவர்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் விரும்பியவாறு அப்பகுதியில் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதன்படி, தூத்துக்குடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் பேரை அழைத்து கருத்து கேட்டோம். அதன் அடிப்படையில் அப்பகுதியில் ரூ. 100 கோடி செலவில் ஸ்மார்ட் பள்ளி, தரமான மருத்துவமனை, 15 கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் விநியோகம், அப்பகுதியில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வழங்கிய நிவாரணத் தொகை அளவுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் வழங்கத் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...