தமிழகம் முழுவதும் உள்ள நஞ்சை நிலங்களை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் மூத்த ஆலோசகரின் மனுவின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள நஞ்சை நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றம் மூத்த ஆலோசகரின் மனுவின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள நஞ்சை நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

நஞ்சை நிலங்களைப் பாதுகாக்க மூத்த ஆலோசகர் ராமன் அளித்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் இருவரும் இணைந்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அரசு அதிகாரிகளின் பங்கேற்பு நஞ்சை நிலங்களைப் பாதுகாப்பதற்கு முக்கியம் எனத் தெரிவித்து, அதற்கு பி.எஸ்.ராமன் அவர்களை நடுநிலை அறிவுரையாளராகவும் பணியமர்த்தி உத்தரவிட்டுள்ளனர்.

அந்த உத்தரவில், பி.எஸ்.ராமன் இது தொடர்பாக வருகிற ஜனவரி 28 -க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், அவர்கள் பள்ளிக்கரணை நஞ்சை நிலங்களை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் கழுவெளி ஏரியைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனைத்து அரசு துறையினரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். 

முதல் கட்ட அறிக்கையில் வழங்கப்பட்ட தீர்ப்பின் சாரம், நஞ்சை நிலங்கள் என்பது சுற்றுச்சுழலின் சிறுநீரகம் போன்றது. மண்ணின் வளங்களைச் சுழற்சி செய்ய, நீரைத் தூய்மையாக்க, வெள்ளத் தடுப்பு, நிலத்தடி நீரை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நஞ்சை நிலங்கள் அதன் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதே ஆகும். 

 

இதையடுத்து, ராமன் கூறும் போது சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.92% நஞ்சை நிலங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால், அவையனைத்தும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து வருகிறது என்றார். மேலும், நீர்நிலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு 2001 -ம் ஆண்டு முதல் 2018 -ம் ஆண்டு வரை நிதியாக மட்டும் 5.03 கோடி வாங்கியுள்ளது. ஆனால், அதை சரியாக பயன்படுத்தவில்லை என அவர் குற்றசாட்டியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து நஞ்சை நிலங்களின் மீது கட்டிடங்களை கட்டப்படுவதைத் தடுக்க சட்ட முன்வரைவு கொண்டுவர வேண்டுமென்றும், அவற்றைப் பாதுகாக்கும் விதமாகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கையேடுகள் கொண்டுவரமேண்டும் என ராமன் அழுத்தம் கொடுத்து வருகிறார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...