கோவையில் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கைது

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த சங்கத்தினர் மாநிலம் தழுவிய கோரிக்கை முழக்கப் போராட்டங்களை கடந்த 20 நாட்களாக நடத்தி வரும் நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



மேலும், மாவட்ட ஆட்சியரின் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதோடு, 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திக் கண்டன கோஷங்களையும் எழுப்பினர். 

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கூறுகையில், "கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்த செலவில் தான் இணையதள பயன்பாட்டினை கவனித்துக் கொள்கிறோம். இதன் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். 

கிராம நிர்வாக அலுவலகத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறோம். குறிப்பாகப் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க கூட இடமில்லை. இந்த சிக்கல்களை சரிசெய்ய வேண்டும். மேலும், பட்டா மாறுதல் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்," என்றார். 



இதற்கிடையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...