கோவையில் உடல் நலக்குறைவால் ஆயுள் கைதி உயிரிழப்பு

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணையனின் மகன் செந்தில்குமார் (39). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2011 -ம் ஆண்டு முதல் சிறைவாசத்தில் இருந்த செந்தில் குமாருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. 



இந்நிலையில், நேற்று காலை திடீரென செந்திகுமார் கை, கால்கள் செயலிழந்து காணப்பட்டார். இதையடுத்து, சிறை நிர்வாகத்தினர் செந்தில் குமாரை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...